வைகை வடகரை ரோடு பணி இரண்டு மாதங்களில் முடியும்
மதுரை: மதுரை - திண்டுக்கல் ரோட்டில் வைகை வடகரையில் 8 கி.மீ.,க்கு ரூ.176 கோடியில் புதிய ரோடு அமைக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. சமயநல்லுார் 4 வழிச்சாலையில் துவங்கி ஆற்றோரமாக பரவை மார்க்கெட் பின்புறமாக வரும் இந்த ரோடு, திண்டுக்கல் ரோட்டில் ஆற்றுப் பாலம் அருகே வந்து சேர்கிறது.
இன்னும் 200 மீ., தொலைவுக்கு நில எடுப்பு செய்ய வேண்டியுள்ளது. இந்த இடத்தில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான அய்யனார் கோயில் சொத்துக்கள் உள்ளன.
இப்பகுதி வீடுகளை காலி செய்யும்படி நில எடுப்பு வருவாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடையும். பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மோகனகாந்தி, உதவி பொறியாளர் சக்திவேல் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
ரோடு அமைக்கும் பணி 2 மாதங்களில் முழுமையாக முடியும். இதனால் திண்டுக்கல் ரோட்டில் கனரக வாகனங்களின் நெரிசல் குறையும் என்கின்றனர் அதிகாரிகள்.
மேலும்
-
பழநி கோவில் நில மோசடி வழக்கு; கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழப்பு
-
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: இன்றும் சவரனுக்கு ரூ.520 உயர்வு
-
கோவில்களில் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது; சினிமா பிரபலங்கள், விஐபிகளுக்கு கட்டுப்பாடு
-
துருக்கி, பாகிஸ்தானுடன் செய்த ஒப்பந்தம் சவுதிக்கு பாதுகாப்பை தராது; ஈரான்
-
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கும் மசோதா; அமெரிக்கா நிறைவேற்றம்
-
மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி; 4வது நபர் கைது