ஏராளமானோரிடம் பண மோசடி: தம்பதி கைது
தேவனஹள்ளி: வீட்டில் இருந்து வேலை செய்ய நினைப்போரிடம், பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம் தேவனஹள்ளியை சேர்ந்தவர் கிரண், 35. இவரது மனைவி ஆர்த்தி, 29. இவர்கள் இருவரும் சேர்ந்து காளிகா தேவி என்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தினர். வீட்டில் இருந்து வேலை செய்ய நினைப்போருக்கு, தங்கள் நிறுவனம் மூலம் வேலை வாங்கி தருவதாக விளம்பரப்படுத்தினர்.
இதை நம்பி நிறுவனத்திற்கு சென்றவர்களிடம், மெழுகுவர்த்திகள், உலர் பழங்கள், ஊதுபத்திகளை பார்சல் செய்து கொடுக்கும் வேலை வழங்குவதாக கூறினர். மூல பொருட்களை வழங்க பலரிடம் இருந்து, பணம் பறித்தனர்.
மாதம் 23,000 ரூபாயில் இருந்து 30,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என்று நம்ப வைத்தனர். இதனால் அவர்களிடம் பலர் பணம் கொடுத்தனர். பணம் வாங்கியதும் தம்பதி தலைமறைவாகினர்.
பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தவர்கள், கடந்த மாதம் 29ம் தேதி தேவனஹள்ளி போலீசில் புகார் செய்தனர்.
தலைமறைவாக இருந்த தம்பதியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும்
-
பழநி கோவில் நில மோசடி வழக்கு; கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழப்பு
-
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: இன்றும் சவரனுக்கு ரூ.520 உயர்வு
-
கோவில்களில் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது; சினிமா பிரபலங்கள், விஐபிகளுக்கு கட்டுப்பாடு
-
துருக்கி, பாகிஸ்தானுடன் செய்த ஒப்பந்தம் சவுதிக்கு பாதுகாப்பை தராது; ஈரான்
-
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கும் மசோதா; அமெரிக்கா நிறைவேற்றம்
-
மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி; 4வது நபர் கைது