ரூ.1.50 லட்சம்  லஞ்சம் வாங்கிய 2 பெஸ்காம் அதிகாரிகள் கைது

பெங்களூரு: கட்டடத்திற்கு மின் இணைப்பு கொடுக்க, 1.50 லட்சம் ரூபாய், லஞ்சம் வாங்கிய 'பெஸ்காம்' அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு ஹுளிமாவில் வசிப்பவர் அர்ஷத் உல்லா. கட்டட கான்ட்ராக்டர். இவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வரும் ஒரு கட்டடத்திற்கு மின் இணைப்பு வழங்க கோரி, ஹுளிமாவு பெஸ்காம் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

விண்ணப்பத்தை ஆய்வு செய்த நிர்வாக செயற்பொறியாளர் நாகரத்னா, உதவி செயற்பொறியாளர் சாமி ஆகியோர், மின் இணைப்பு கொடுக்க 1.50 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டனர். பணம் கொடுக்க ஒப்புக்கொண்ட அர்ஷத் உல்லா நேற்று, நாகரத்னா, சாமி மீது லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தார்.

அர்ஷத் உல்லாவுக்கு சில அறிவுரைகள் வழங்கிய லோக் ஆயுக்தா போலீசார் அவரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

நாகரத்னா, சாமியிடம், அர்ஷத் உல்லா லஞ்ச பணத்தை கொடுத்தார். அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார் கையும், களவுமாக இருவரையும் கைது செய்தனர்.

Advertisement