பொது விநியோகத் திட்ட குறைகேட்பு முகாம்

விழுப்புரம்: விழுப்புரத்தில், பொது விநியோகத்திட்ட குறைகேட்பு முகாம் நடந்தது.

விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில், குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் நடந்த முகாமிற்கு, தனி தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கின கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

முகாமில், ரேஷன் கார்டில் பெயர், முகவரி, மொபைல் எண் திருத்தப்பணிகள், முகவரி மாற்றம், புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டது.

ரேஷன் விநியோகத்தில் குறைபாடுகள் குறித்தும் பொதுமக்கள் புகார் அளித்தனர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, அங்கேயே ஆன்லைனில் திருத்தப்பணிகள் நடந்தது. புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Advertisement