மலைக்கோவிலில் மகா நவசண்டியாகம் நிறைவு



ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், தேர்ப்பேட்டை பகுதி பொதுமக்கள் சார்பில், உலக நன்மைக்காக மூன்று நாள் மகா நவ-சண்டியாகம் கடந்த, 7ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கி-யது.

அன்று மாலை, 4:30 மணிக்கு, தேர்ப்பேட்டை பச்சைகுளத்-திலிருந்து நீர் குடம் எடுத்து வரப்பட்டது. நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு முதற்கால நவசண்டியாகம், இரவு, 7:00 மணிக்கு இரண்டாம் கால மகா நவசண்டியாகம் நடந்தது. விழாவின் கடைசி நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு மூன்றாம் கால மகா நவசண்டியாகம் நடந்தது.மதியம், 1:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, நவசண்டியாக விளக்கவுரை, மதியம், 2:00 மணிக்கு கோவிலை சுற்றி கலசம் புறப்படுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. ஓசூர், காங்., - முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் நாகராஜ், கவுன்சிலர் கிருஷ்ணவேணி ராஜூ உட்பட பலர் பங்கேற்றனர். பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement