பாசன கால்வாய்களில் கொட்டப்படும் குப்பை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி: பாசன கால்வாய்களில் குப்பை கொட்டுவோர் மீது, நடவ-டிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை இடது மற்றும் வலதுபுற கால்-வாய்களில் இருந்து, முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்-பட்டு கால்வாயில் சென்று கொண்டிருக்கிறது. இக்கால்வாய்-களை, 69 ஆண்டுக்கு முன், அப்போதைய காலகட்டத்தில் உள்ள தரை மட்டத்திற்கு ஏற்ப அமைத்திருந்தனர். நாளடைவில், 3 அடி உயரத்திற்கு மண் சேர்ந்ததால், கால்வாய்கள் பள்ளத்திற்கு சென்று விட்டன. இந்நிலையில், கால்வாய் ஓரம் வசிப்பவர்கள் பலர் குப்பையை கால்வாயில் வீசி வருவதோடு, பல்வேறு அசுத்தங்களை உண்டாக்-குன்றனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து தண்ணீர் மாசடைந்து பச்சை நிறத்தில் துர்நாற்றத்துடன் வந்துகொண்டிருக்கும் நிலையில், குப்பை மற்றும் பல்வேறு கழிவுகளை பாசன கால்-வாயில் வீசுவதால், தண்ணீர் மேலும் மாசடைந்து வருகிறது. எனவே இக்கால கட்டத்திற்கு ஏற்ப, கால்வாய்களை உயர்த்தி கட்ட வேண்டும் என்றும், பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் கால்-வாய்களில் குப்பை கொட்டுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.

Advertisement