மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்

தர்மபுரி: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம், 9.30 லட்சம் ரூபாய் மதிப்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகர-ணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.


பள்ளிக்கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடத்தி, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட உதவி உப-கரணம் தேவையுள்ள மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உபகர-ணங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி, தர்மபுரி நகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்-ளியில், தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளியில் படிக்கும், 240 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 9.30 லட்சம் ரூபாய் மதிப்பில், பேட்டரி சைக்கிள், சிபி சேர், மொபைல், காதொலி கருவி, வீடுகளில் கற்க ஏதுவாக கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட-வற்றை சி.இ.ஓ.,ஜோதிசந்திரா, நேற்று
வழங்கினார்.
இதில், உதவி திட்ட அலுவலர் தமிழ்வாணன், மாவட்ட ஒருங்-கிணைப்பாளர் சுரேஷ், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், இயன்-முறை மருத்துவர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

Advertisement