சென்டர் மீடியன் இல்லாத ராயக்கோட்டை சாலை தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அச்சம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள அமேரியா பெட்ரோல் பங்க் முன் துவங்கி, அசோக் பில்லர் சர்க்கிள் வரை, 1.5 கி.மீ., துாரத்திற்கு, ராயக்கோட்டை சாலையில் தினமும் கடும் போக்குவ-ரத்து நெரிசல் ஏற்படுகிறது. இச்சாலையில் ராகவேந்திரா கோவில் முன் மட்டும், சென்டர் மீடியன் உள்ளது. மற்ற இடங்களில் சென்டர் மீடியன் அமைக்காமல் உள்ளனர். ராயக்கோட்டை வழி-யாக தர்மபுரி செல்லும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள், பஸ்கள் போன்றவை இச்சாலையை தான் பயன்படுத்துகின்றன.


தினமும், 50 ஆயிரம் வாகனங்களுக்கு மேல் பயன்படுத்தும் இச்சாலையில், அமேரியா பெட்ரோல் பங்க் முதல், அசோக் பில்லர் சர்க்கிள் வரை, சென்டர் மீடியன் அமைக்காததால், வாக-னங்கள் ஒன்றை ஒன்று முந்தி தாறுமாறாக செல்கின்றன. சாலையை குறுக்காக நிறுத்தி, பல வாகனங்களை திருப்புகின்-றனர். அதனால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், விபத்து அச்சம் நிலவுகிறது.போலீசாராலும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடிய-வில்லை. மாநில நெடுஞ்சாலைத்துறை போக்குவரத்தை நெரி-சலை பற்றி கவலைப்படாமல் அலட்சியமாக உள்ளது. சாலை-யோரம் வாகனங்களை நிறுத்துவதால், சாலையின் அளவு குறைந்-துள்ளது. சென்டர் மீடியன் அமைத்தால், சாலையோரம் வாக-னங்கள் நிறுத்துவதை கட்டுப்படுத்த முடியும். அதனால், மாநில நெடுஞ்சாலைத்துறை, சென்டர் மீடியன் அமைக்க முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement