கள்ளக்குறிச்சி நகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள்; கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கலெக்டர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான இலவச நீட் பயிற்சி மையத்தினை திறந்து வைத்து பயிற்சி வகுப்பினை மாணவ, மாணவிகள் முறையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என கலெக்டர் பத்மஜா அறிவுரை வழங்கினார். தொடர்ந்து ராஜா நகரில் நடந்து வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணியின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். பழைய அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோட்ட அளவிலான விழுதுகள் சேவை மையத்தின் செயல்பாடுகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.ஏமப்பேர் நகராட்சி பூங்கா, படகு சவாரி குளம் பராமரிப்பு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் ஆகியன குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். மருத்துவ கழிவுகளை முறையாக தரம் பிரித்து அகற்றும் பணிகளை தடையின்றி செய்திட அறிவுறுத்திய கலெக்டர் மருத்துவ கல்லுாரி வளாகத்தினை துாய்மையாக பராமரிக்க வேண்டுமென மருத்துவர்களிடம் தெரிவித்தார்.
மேலும்
-
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்
-
மலைக்கோவிலில் மகா நவசண்டியாகம் நிறைவு
-
பாசன கால்வாய்களில் கொட்டப்படும் குப்பை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
-
நெற்பயிர் காப்பீடு செய்ய கூடுதல் கால அவகாசம்
-
சென்டர் மீடியன் இல்லாத ராயக்கோட்டை சாலை தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அச்சம்
-
இதே நாளில் அன்று