ஈரான் ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி வீடியோ வெளியீடு
டெஹ்ரான்: ஈரான் ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி பரவிய நிலையில் அவர் நலமுடன் பேசி கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தாக்குதல் நடத்தின. முதல் நாள் தாக்குதலில் அந்நாட்டின் ஆட்சியாளராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
மேலும், அந்நாட்டு தலைவர்கள் மற்றும் கமேனியின் உறவினர்கள் சிலரும் கொல்லப்பட்டனர். இதையடுத்து, புதிய ஆட்சியாளராக, கமேனியின் மகனான மொஜ்தபா கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய தலைவராக தேர்வானதில் இருந்து மொஜ்தபா பொதுவெளியில் தோன்றாமல் இருந்து வருகிறார். இதற்கு பாதுகாப்பு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், அயதுல்லா அலி கமேனி மீதான தாக்குதலின்போது, மொஜ்தபா மிக பலத்த காயம் அடைந்ததாகவும், அதனாலேயே அவர் பொது வெளியில் தோன்றவில்லை என்றும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலும் கூறி வந்தன.
இந்நிலையில், மொஜ்தபா மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவரது இறப்பு செய்தியை விரைவில் உலகம் கேட்கும் எனவும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
ஆனால், ஈரான் அதிகாரிகள் இச்செய்தியை மறுத்து இருந்தனர். தற்போது மொஜ்தாபா கமேனி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி பரவிய நிலையில் அவர் நலமுடன் பேசி கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
பழைய வீடியோ போட்டு ஏமாற்றுகிறார்கள். தில்லாலங்கடி வேலை தெரிந்த அமைதி மார்கத்தினர் !!!மேலும்
-
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்
-
மலைக்கோவிலில் மகா நவசண்டியாகம் நிறைவு
-
பாசன கால்வாய்களில் கொட்டப்படும் குப்பை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
-
நெற்பயிர் காப்பீடு செய்ய கூடுதல் கால அவகாசம்
-
சென்டர் மீடியன் இல்லாத ராயக்கோட்டை சாலை தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அச்சம்
-
இதே நாளில் அன்று