வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு போராட்டம்; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

3


புதுடில்லி: பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக 1942ம் ஆண்டு மகாத்மா காந்தி துவங்கிய வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றவர்களை இன்று (ஆகஸ்ட் 09) பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.

இந்தியா சுதந்திரம் பெற காரணமாக அமைந்த போரட்டங்களுள் மிக முக்கியமானது 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம். இதில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
1942 ஆக., 8ம் தேதி, மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் 'வெள்ளையனே வெளியேறு' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக 1942ம் ஆண்டு மகாத்மா காந்தி துவங்கிய வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றவர்களை இன்று (ஆகஸ்ட் 09) பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''வரலாற்றுச் சிறப்புமிக்க 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் நினைவுகூர்கிறோம். அவர்களின் துணிச்சல் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றும் ஒரு உத்வேகமாகத் திகழும்.

மகாத்மா காந்தியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு, 'வெள்ளையனே வெளியேறு' என்ற அந்த முழக்கம் நமது விடுதலைப் போராட்டத்திற்குப் புதிய ஆற்றலை ஊட்டியது; அத்துடன், காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபடுவதற்கான நமது மக்களின் அசைக்க முடியாத உறுதியையும் அது வெளிப்படுத்தியது'' என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


உறுதி, துணிவு




மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தியின் அழைப்பின் பேரில் துவங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம் நமது சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று அத்தியாயமாகும், இது நாட்டு மக்களை ஒருங்கிணைத்து, ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற செய் அல்லது செத்து மடி என்ற உறுதியையும், துணிவையும் அவர்களுக்கு வழங்கியது.
தேசத்தின் விடுதலைக்காக இந்த மாபெரும் போராட்டத்தில் அனைத்தையும் தியாகம் செய்த சுதந்திரப் போராளிகள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன். ஆகஸ்ட் புரட்சியின் இந்த நாள், தேச நலனை முதன்மையாக வைத்து சுதேசியை ஏற்றுக்கொள்ளவும், சுயசார்பு இந்தியாவை உருவாக்கவும், வளர்ந்த இந்தியா என்பதை அடையவும் நம்மை ஊக்குவிக்கிறது. இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

Advertisement