பணியின் போது இறந்த போலீஸ் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கல்

திருப்புத்தூர்:சிங்கம்புணரியில் பணியின் போது உயிரிழந்த போக்குவரத்து போலீஸ் காளிமுத்து குடும்பத்திற்கு 2009 பேட்ஜ் போலீசார் குழுவினர் நிதி உதவி அளித்தனர்.

தமிழகத்தில் 2009 ம் ஆண்டில் பணியில் சேர்ந்த போலீசார் ‛அன்பு உள்ளங்கள்' என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு அமைத்து செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் மாதந்தோறும் இக்குழுவிற்கென வழங்கும் நிதியை சேகரித்து பணியின் போது இறக்கும் போலீசாரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளித்துவருகின்றனர்.

அந்தவகையில் 2026 ஜன., 16 ம் தேதி சிங்கம்புணரியில் பணிபுரிந்தபோக்குவரத்து போலீஸ் எம்.காளிமுத்து, பணியின் போது உயிரிழந்தார். அவரது குடும்பத்தாருக்கு 2009 பேட்ஜ் போலீசார் ரூ.24 லட்சத்து 6 ஆயிரத்து 388 யை நிதி உதவியாக வழங்கினர். இதுபோன்று இக்குழுவினர் 46 குடும்பத்தினருக்கு ரூ.11 கோடியே 5 லட்சத்து 66 ஆயிரம் வழங்கியுள்ளனர்.

Advertisement