மம்தா மருமகன் அபிஷேக் கண் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி: கடும் நிபந்தனைகளுடன் சுப்ரீம்கோர்ட் உத்தரவு
புதுடில்லி: மருத்துவ சிகிச்சைக்காக திரிணமுல் காங். எம்பி அபிஷேக் பானர்ஜி வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி. எம்பியாக இருக்கும் அவர் மீது அவதூறு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், கோல்கட்டா உயர் நீதிமன்றம் அபிஷேக் பானர்ஜி, மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஆக. 5ம் தேதி தடை விதித்து உத்தரவிட்டது.
மருத்துவக்குழு முன்பு ஆஜராகி இருந்தால் மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டுமா? இல்லையா? என்பதை நீதிமன்றம் தீர்மானித்து இருக்கும் என்றும் கோல்கட்டா உயர்நீதிமன்றம் தமது உத்தரவில் குறிப்பிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அபிஷேக் பானர்ஜி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அபிஷேக் பானர்ஜி, செப்டம்பர் மாதம் 3 வாரங்கள் கண் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளதாவது;
மனுதாரர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதால் அவர் மீதான வழக்கு விசாரணைக்கு எந்தவொரு தடையும் ஏற்படாது. கண் அறுவை சிகிச்சைக்காக 3 வாரங்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுகிறார். தனது தூதரக கடவுச்சீட்டில் மட்டுமே பயணிக்க முடியும்.
விரிவான பயணத்திட்டம், செல்லவிருக்கும் நாட்டில் உள்ள உள்ளூர் முகவரி, சிகிச்சை பெறும் மருத்துவமனையின் விவரங்கள், தங்கும் நாட்கள், விமான சேவை விவரங்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும். இந்த தகவல்கள் அனைத்தும் புலனாய்வு அமைப்புகளால் கண்காணிக்க மட்டுமே பயன்டுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு தங்கள் உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர்.
ஆஹா இந்தியாவிலேயே சரியான சிகிச்சை பெற முடியாது போல் தெரிகிறதுமேலும்
-
வெங்காய விதை உற்பத்தியில் கவனம்! வேளாண் பல்கலை., அறிவுரை
-
இன்று இனிதாக
-
திருத்தணி முருகன் கோவிலில் 10 நாளில் ரூ.2.52 கோடி காணிக்கை
-
திருநின்றவூர் ரயில் நிலையத்தில் அத்துமீறல் காதலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
போதைப்பொருள் இல்லாத தமிழகம் துாய்மை பணியாளர்கள் உறுதிமொழி
-
லோக்சபாவில் இன்றும் அமளி; அரசும், எதிர்க்கட்சியும் உடன்பாடு செய்ய சபாநாயகர் வேண்டுகோள்