ஏ.டி.எம்.,ல் பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்த இருவர் கைது
சாயல்குடி: சாயல்குடி போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் செந்துார்பாண்டியன் 55, இவர் ஆக., 5ல் அங்குள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கத் தெரியாமல் சிரமப்பட்டார். அப்போது அங்கு நின்றிருந்த இருவர் தாங்கள் பணம் எடுத்து தருவதாக கூறியதை நம்பி ஏ.டி.எம்., கார்டை கொடுத்துள்ளார்.
அவர்களும் உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறி வேறொரு ஏ.டி.எம்., கார்டை திரும்ப கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் செந்துார்பாண்டியன் வீடு திரும்பிய நிலையில், மாலையில் அவரது வங்கிக் கணக்கில் ரூ. 16 ஆயிரம் தொகை ஏ.டி.எம்., மூலமாக எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. இது குறித்து வங்கியின் அறிவுறுத்தலின் பேரில் சாயல்குடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் கோவையை சேர்ந்த காட்ஜான் 24, துாத்துக்குடி சாத்தான்குளத்தைச் சேர்ந்த பீட்டர் பிரபாகரன் 34, ஆகியோாரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லோக்சபா செயல்பட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: சபாநாயகர் வேண்டுகோள்
-
விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலுாரை சேர்க்க மக்கள் எதிர்பார்ப்பு:கண்டாச்சிபுரம் தாலுகா நீதிமன்ற பிரச்னைக்கும் தீர்வாகும்
-
உங்கள் ஊராட்சி... அரசு மாணவியர் விடுதி முன் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் தவிப்பு
-
மம்தா மருமகன் அபிஷேக் கண் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி: கடும் நிபந்தனைகளுடன் சுப்ரீம்கோர்ட் உத்தரவு
-
காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி விசாரணையில் கொலையானது அம்பலம் விக்கிரவாண்டியில் லாரி டிரைவர் கைது
-
நீலக்கொடி சான்றிதழுக்கு இடம் அளவீடு செய்யும் பணி துவக்கம்: சுற்றுலா பயணிகளை ஈர்க்க அரசின் சிறப்பு திட்டம்
Advertisement
Advertisement