வாழை சாகுபடி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பகுதிகளில் வாழை சாகுபடி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஜெய்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
விக்கிரவாண்டி வட்டாரத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் காரீப் பருவத்தில் நடப்பட்ட வாழை சாகுபடி செய்து வருபவர்கள், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து பயிரையும், வருமானத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் 2026–27ம் ஆண்டிற்கான பிரதம மந்திரி பைசல் பீமா யோஜனா பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் வாழை பயிரை காப்பீடு செய்து பயன்பெறலாம்.
வாழை அதிக முதலீடு தேவைப்படும் முக்கியமான தோட்டக்கலைப் பயிராகும். புயல், சூறைக்காற்று, கனமழை, வெள்ளம், வறட்சி, ஆலங்கட்டி மழை மற்றும் பூச்சி, நோய் தாக்குதல் போன்ற காரணங்களால் வாழைப் பயிரில் பெரும் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இயற்கை இடர்பாடு ஏற்பட்ட பின் இழப்பீட்டை எதிர்பார்ப்பதைவிட, முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்து கொள்வதே விவசாயிகளுக்கு சிறந்த பாதுகாப்பானது. 2026–27ம் ஆண்டிற்கான வாழை பயிருக்கு ஏக்கருக்கு பிரீமியம் தொகை 725 ரூபாயை வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.
விக்கிரவாண்டி வட்டாரத்தில் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அருகிலுள்ள வங்கி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி, சி.எஸ்.சி., மையம் மூலம் உரிய ஆவணங்களுடன் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கல்
-
மாநில தடகள போட்டியில் கல்லுாரி மாணவர்கள் சாதனை
-
சாலையின் நடுவே மின் கம்பம் மின்வாரியம் நடவடிக்கை தேவை
-
அரசுப்பள்ளி மாணவர்கள் 1500பேருக்கு நீட், ஜே.இ.இ., பயிற்சி
-
விழிப்புணர்வு
-
கிழக்கு கடற்கரை சாலையில் விபத்திற்கு வழிவகுக்கும் சீமை கருவேல மரங்கள்: 6 மாதமாக அகற்றப்படவில்லை