மாநில தடகள போட்டியில் கல்லுாரி மாணவர்கள் சாதனை
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியத்தைச் சேர்ந்த அரசு கல்லுாரி மாணவர்கள் தடகள போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்தனர்.
சென்னை, சேத்துப்பட்டு நேரு பூங்காவில் நேற்று முன்தினம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடந்த கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற 19 வயதிற்கான தடகள போட்டியில் பங்கேற்ற விக்கிரவாண்டி ஒன்றியம், டி.புதுப்பாளையத்தை சேர்ந்த விழுப்புரம் அரசு கல்லுாரி மாணவர் நவீன் சந்திரன் 100 மீட்டர் போட்டியில் முதலிடம் பிடித்தார்.
மண்டகப்பட்டைச் சேர்ந்த செஞ்சி அரசு கலைக் கல்லுாரி மாணவர்கள் சிவபாலன் 100 மீட்டர் போட்டியில் முதலிடமும், 400 மீட்டர் போட்டியில் இரண்டாம் இடமும் பிடித்தார்.
மாணவர் மனோ பிரசாத் 400 மீட்டர் போட்டியில் முதலிடமும்,100 மீட்டர் போட்டியில் மூன்றாமிடம் பிடித்து மாநில அளவில் சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆணையம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சாதனை படைத்த மாணவர்களை நமது சிலம்பம் பயிற்சி குழு பயிற்சியாளர் சுரேந்தர் சண்முகம், பெற்றோர்கள் பாராட்டினர்.
மேலும்
-
ஏராளமான அச்சுறுத்தல்; ரகசிய பயணத்தை ஒப்புக்கொண்டார் அதிபர் டிரம்ப்
-
ஆடி அமாவாசை வழிபாடு; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
-
கைம்பெண்கள், ஆதரவற்றோர் இணையத்தில் பதிவு செய்யலாம்
-
மூதாட்டியிடம் இருந்து 3 பவுன் செயின் பறிப்பு
-
'எக்ஸ் 1 லாங் வீல் பேஸ்' முன்பதிவு துவக்கம்
-
மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்