சாலையின் நடுவே மின் கம்பம் மின்வாரியம் நடவடிக்கை தேவை

செஞ்சி: மேல்மலையனுாரில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தை இடம் மாற்றி வைக்க மின் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு பஸ் நிலையத்தில் இருந்து செல்வதற்கு ஒத்தவடை சாலை வழியாக ஒரே வழி இருந்தது. பக்கர்கள் கூட்டம் அதிகரித்து நெரிசல் ஏற்பட்டதால் அப்போதைய எம்.எல்.ஏ., தமிழ்மொழி ராஜதத்தன் மேற்கொண்ட முயற்சியால் தண்டேஸ்வரர் கோவில், ஏரிகரை வழியாக புதிதாக கோவில் அருகே இணையும் படி சாலை அமைத்தனர்.

இந்த சாலையின் வழியாக போக்குவரத்து அதிகரித்ததால் சாலையின் அகலத்தை மேலும் விரிவுபடுத்தினர்.

தற்போது இந்த சாலை மிக முக்கிய சாலையாக மாறி உள்ளது. விழா நாட்களில் போலீஸ் வாகனங்கள் கோவில் அருகே செல்வதற்கும், பக்தர்கள் வாகனங்கள் வெளியே செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது.

சாலை விரிவாக்கத்தினால் சாலையோரம் இருந்த மின் கம்பம் தற்போது சாலையின் மையத்தில் உள்ளது. இந்த மின் கம்பம் விழா நாட்களில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது.

கூட்டம் அதிகம் உள்ள நாட்களில் மின் கம்பத்தின் மீது ஏதேனும் வாகனம் மோதினால் கம்பம் முறிந்து விமுத்து விபத்து நடக்க வாய்ப்புள்ளது.

எனவே, இந்த மின் கம்பத்தை இடம் மாற்றி சாலையின் ஓரம் வைப்பதற்கு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement