தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கல்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 16 குடும்பங்களுக்கு, நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

பரங்கிப்பேட்டை அடுத்த ஆதிவராகநல்லுார் பாரேகான் தைக்கால் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 16 இருளர் குடும்பங்களின் கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, பு.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், ரோட்டரி கிளப் சிதம்பரம் மற்றும் இன்னர் வீல் கிளப் சிதம்பரம் இணைந்து, தலா ரூ.5 ஆயிரம் மதிப்பில், மளிகை பொருட்கள், காய்கறிகள், பாத்திரங்கள் மற்றும் துணிமணிகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில், பள்ளி நண்பர்கள் குழு பரந்தாமன், சுமன், கார்த்திக், புஷ்பராஜ்,முருகானந்தம், பரசுராமன், ராஜேஷ், அயூப்கான், சம்சாத் பேகம், அம்பிகா,சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மிஸ்டர் கேசவன், முகமது யாசின்,தீபக் குமார், இன்னர் வீல் கிளப் அனிதா தீபக்குமார், வேதா, சம்ஷாத் பேகம்,செல்வி, வரலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement