காதோரம் கவிதை பேசுற கம்மல், கழுத்தை சுத்தி கம்பீரம்..  நீங்களும் அழகு தேவதையா மாறணுமா.. அப்ப...ஓடி வாங்க தினமலர் கண்காட்சிக்கு..

   தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சினாலே பொண்ணுங்களுக்கும் குட்டீஸ்களுக்கும் அம்புட்டு சந்தோஷம்.. அப்படி என்னதான் இருக்கு அங்கேன்னு கேட்டா... பெண்களோட டிரெண்டிங் லிஸ்ட்ல இருக்குற அத்தனை விஷயங்களும் அங்கே கலர்புல்லா கொட்டிக் கிடக்கு.. காதோரம் கவிதை பேசுற கம்மல், கழுத்தை சுத்தி கம்பீரம் காட்டுற நெக்லஸ், நுனி மூக்குல மின்னுற மூக்குத்தி, கையைக் காட்டி கூப்பிடுற வளையல்கள்னு... ஒவ்வொரு ஸ்டாலும் தனித்தனியா ஒரு கதையே சொல்லுது. ஆள் பாதி... ஆடை பாதின்னு சொன்ன காலம்லாம் மலையேறி போச்சு மக்களே... இப்போதெல்லாம் மணம் பாதி... நறுமணம் மீதிங்கிற அளவுக்கு பெர்ப்யூம் உலகம் வேற லெவல்ல போயிட்டு இருக்கு. வாசனை திரவியப் பிரியர்களுக்கு இந்த எக்சிபிஷன் ஒரு சரியான வேட்டைக்களம் தான். அப்புறம், தலைமுடியை காய வைக்கவும் அதே நேரத்துல துணியை அயர்ன் பண்ணவும் டூ–இன்–ஒன் ஏர் டிரையர்னு ஒரு சூப்பர் கேட்ஜெட் வந்து சர்ப்ரைஸ் தருது.

 முகத்தை இன்னும் மெருகேத்துற அழகு சாதனப் பொருட்கள், கூந்தலை சில்க் போல பளபளக்க வைக்கும் ஷாம்பூக்கள், பாடிக்கு மேட்சான கலர்புல் டிரெஸ்கள்னு எதை தொட்டாலும் விலை குறைவாகவே கிடைக்குது. கலைநயமிக்க டிசைனர் ஜூவல்லரி ஸ்டால்களைப் பார்த்தா கண்ணு கட்டுதுங்க..பெண்களுக்குப் பிடிச்ச மாதிரி 200-க்கும் மேற்பட்ட மாடல்கள்ல செயின், வளையல், நெக்லஸ்னு வெரைட்டி காட்டியிருக்காங்க. அதுலயும் புதுசா வந்திருக்க ஹாஸ்டிக் ட்ரெண்டிங் டாலரும், நிஜ டைமண்ட் மாதிரியே ஜொலிக்குற அமெரிக்கன் டைமண்ட் நெக்லஸும் பட்டையைக் கிளப்புது. அதை வாங்குறதுக்கு பொண்ணுங்க நடுவுல செம்ம போட்டியோ போட்டி.. டிரெஸ் விஷயத்துக்கு வந்தா... பீகார், பஞ்சாபி மாடல் சுடிதார், சாரீஸ்னு லேட்டஸ்ட் டிசைன்ஸ் குவிஞ்சிருக்கு. விலை ஆபரைப் பார்த்தா கண்டிப்பா ஷாக் ஆயிடுவீங்க. 1200 ரூபாய் சல்வார் மெட்டீரியல் வெறும் 500 ரூபாய்க்குத் தர்றாங்க. 1560 ரூபாய் சல்வார் மெட்டீரியல் 800-க்கும், 1950 ரூபாய் சல்வார் மெட்டீரியல் 1000 ரூபாய்க்கும், 2000 ரூபாய் சல்வார் மெட்டீரியல்  1500 ரூபாய்க்கும் அள்ளித் தர்றாங்க.ஏற்கனவே அழகா இருக்குற உங்களை, இன்னும் அழகுபடுத்த ஏகப்பட்ட பிரத்யேக விஷயங்கள் இங்கே வெயிட்டிங்.. நீங்க வந்தால் போதும். கண்காட்சியை விட்டு நீங்க வெளியே போகும்போது, கண்டிப்பா அழகு தேவதையா கெத்தா நடந்து போவீங்க. நாங்க என்ன பாவம் பண்ணோம்னு ஆண்கள் யாரும் பீல் பண்ணவே தேவையில்லை. உங்களை ஹீரோவா மாத்த மில் ரக சட்டைகள், பேன்ட்கள், பெல்ட், சாக்ஸ், ஷூக்கள், வாட்ச், ஏன்... உடற்பயிற்சி செய்யுற ஜிம் கருவிகள் வரைக்கும் எக்கச்சக்கமா வச்சிருக்காங்க.ஆனா ஒரு சின்ன சோகமான விஷயம் என்னன்னா... இந்த தினமலர் கண்காட்சி இன்றோட முடியுதுங்க. இதை மிஸ் பண்ணிட்டா, அப்புறம் அடுத்த வருஷம் வரைக்கும் வழிமேல் விழி வச்சு காத்துட்டிருக்கணும்.அதெல்லாம் முடியாதுப்பா... எனக்கு இப்பவே பார்க்கணும்.. அப்படின்னு தோணுதா? அப்புறம் என்ன யோசனை... உடனே குடும்பத்தோட காரையோ, பைக்கையோ எடுங்க. ஒரே நாள்ல ஒரு அட்டகாசமான ‘டூர்’ போயிட்டு வந்த திருப்தியும், கலக்கலான ஷாப்பிங் அனுபவமும் தினமலர் கண்காட்சியில் கண்டிப்பாக கிடைக்கும். அதுக்கு நாங்க கியாரண்டிப்பா... 

 

 

Advertisement