தொடர் மின்வெட்டு: கன்னிவாக்கம் மக்கள் அவதி
வண்டலூர்:கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால், அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு துணை மின் நிலையத்திற்குட்பட்ட கன்னிவாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம், நள்ளிரவு 1.30 மணிக்கு வழங்கப்பட்டது.
இதனால் குழந்தைகள், முதியோர் கொசுத்தொல்லையால் அவதிப்பட்டனர். அதேபோல் நேற்று பகல் 12 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் மாலை 6 மணிக்கு வழங்கப்பட்டது. அடிக்கடி ஏற்படும் மின்தடையால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, மின்வெட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement