பாவை கல்வி நிறுவன பட்டமளிப்பு விழா

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், பாச்சல் பாவை கல்வி நிறுவனங்களில், பாவை நர்சிங், பார்மசி, அலைட் ஹெல்த் சயின்ஸ், பாவை கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பாவை காலேஜ் ஆப் இன்ஜி-னியரிங், கல்வியியல் கல்லுாரிகளில் படித்த மாணவ, மாணவிய-ருக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. நிறுவனர் நடராஜன் தலைமை வகித்தார்.


கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறு-வன டீன் தாத்ரி மதுக்கூர் சுபராவ், சிறப்பு விருந்தினராக கலந்து-கொண்டார். பாவை நர்சிங் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி முதல்வர் ஹெப்சிராச்சல் செல்லராணி வரவேற்றார். தாளாளர் மங்கை குத்-து விளக்கேற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து, 800-க்கும் மேற்-பட்ட மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. முதல் ரேங்க் பெற்ற இன்ஜி., மாணவர் சண்முகநாதனுக்கு, ஒரு லட்சம் ரூபாய், கலை கல்லுாரியில், முதல் ரேங்க் பெற்ற மாணவி ஹரி-ணிக்கு, 50,000 ரூபாய் வழங்கப்பட்டது. துணைத்தலைவர் மணி-சேகரன், செயலர் டி.ஆர்.பழனிவேல், துணை செயலர் என்.பழ-னிவேல், பொருளாளர் ராமகிருஷ்ணன், இயக்குனர்கள் ராமசாமி, செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement