மாணவர்கள் போராட்டம் குறித்து பார்லியில் அமித்ஷா பதிலளிப்பார்; கிரண் ரிஜிஜூ

புதுடில்லி: மாணவர்கள் போராட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்லியில் பதிலளிப்பார் என்று பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக டில்லியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில், போலீசார் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, பார்லியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றன.

இந்த நிலையில், மாணவர்கள் போராட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்லியில் பதிலளிப்பார் என்று பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

டில்லியில் அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; மாணவர் அமைப்புகள் மீதான நடவடிக்கைகள் குறித்து முழுமையான மற்றும் விரிவான விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாக நான் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்லியில் பதிலளிக்கிறார். இது தொடர்பான விவாதத்தின் போது, அவையின் கவனத்தை திசைதிருப்பும் வகையிலோ அல்லது உள்துறை அமைச்சரின் அறிக்கையைத் தடுத்து நிறுத்தும் வகையிலோ, எதிர்க்கட்சிகள் எந்தவிதக் இடையூறுகளையும் ஏற்படுத்தக் கூடாது.

உள்துறை அமைச்சர் மற்றும் அரசின் பதிலைக் கவனமாகக் கேட்க வேண்டும். விவாதம் தொடங்கிவிட்டால், நாம் அதுகுறித்து விரிவாக விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement