பேராசிரியர்கள் போராட்டம் இரவிலும் தொடர்கிறது 

புதுச்சேரி: புதுச்சேரி அரசு கல்லுாரி பேராசிரியர்கள் போராட்டம் ஏழாவது நாளாக இரவிலும் தொடர்ந்தது.

புதுவை மாநிலத்தில் அமைந்துள்ள அரசு கல்லுாரிப் பேராசிரியர்களுக்கு கடந்த இருபது ஆண்டுகளாகப் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அவர்களுக்குச் சேரவேண்டிய நிலுவைத்தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில், தங்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி பேராசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

இந்நிலையில், அதிகாரிகளுடன் பேராசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து ஏழாவது நாளாக பேராசிரியர்களின் போராட்டம் நேற்று நடந்தது. காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு நிறுவன வளாகத்தில் பேராசிரியர்கள் இரவிலும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

Advertisement