வாழ்நாள் சேமிப்பு ரூ.60 லட்சத்தை கொடிநாள் நிதியாக வழங்கிய முதியவர்; எழுந்து நின்று மரியாதை செலுத்திய அதிகாரிகள்
-நமது நிருபர்-
தனது வாழ்நாள் சேமிப்பான 30 லட்சம் பணம் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்பு தங்க நகை ஆகியவற்றை கொடிநாள் நிதியாக வழங்க மதுரையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயில் எழுதி மதுரை கலெக்டரிடம் ஒப்படைத்தார். அவருக்கு கலெக்டர் மற்றும் அதிகாரிகள் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினர்.
மதுரை ஹார்விபட்டியை சேர்ந்தவர் சுப்பையா(82). மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். சில ஆண்டுகளுக்கு முன் மனைவி உயிரிழந்த நிலையில் குழந்தைகள் மற்றும் உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
உடல் தானம்

இந்நிலையில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் நிசாந்த் கிருஷ்ணாவிடம் தனது வங்கி கணக்கில் உள்ள 30 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகை மற்றும் வங்கி லாக்கரில் தனது பெயரில் உள்ள 30 லட்சம் ரூபாய் மதிப்பு தங்க பொருட்கள் ஆகியவற்றிற்கான உயில் ஆவணத்தை ராணுவ வீரர்களுக்காக கொடிநாள் நிதியாக ஒப்படைத்தார். மேலும் 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார். இவர், கடந்த 2013ம் ஆண்டு தனது உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவ கல்லூரிக்கு தானமாக எழுதி வைத்துள்ளார்.
பாராட்டு
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்ட முகாமில் சுப்பையா கொடிநாள் நிதியாக 60 லட்சம் ரூபாய் அளவுக்கு உயில் ஆவணத்தை வழங்கியதை பாராட்டும் வகையில் அங்கிருந்த அனைத்து அரசு அதிகாரிகளும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
சுப்பையா நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கு குழந்தைகள், மனைவி என யாருமில்லை. நமது நாட்டை காப்பாற்றுவது ராணுவம் தான். அவர்களுக்கு எவ்வளவு செய்தாலும் அது நமக்கு மனது திருப்தி தரும். 60 லட்சம் மதிப்பிலான டெபாசிட் தொகை, லாக்கர் ஆகியவற்றை பணமாக எடுத்து ராணுவ வீரர்களுக்காக வழங்க முயன்றேன். ஆனால் வங்கிகளில் அதனை அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக உயில் ஆவணமாக வழங்கியுள்ளேன். மேலும் ரூ.10 ஆயிரம் காசோலை கொடுத்துள்ளேன். சேமிப்பில் இருந்து மாத மாதம் வரும் வட்டி பணத்தையும் கொடுக்கவுள்ளேன். இது திருப்தியாக உள்ளது .
நன்றி கடன்
நான் இருந்தாலும் இறந்தாலும் திருப்தியாக உள்ளேன். ஆத்ம திருப்திக்காக கொடுத்துள்ளேன். நாட்டு மக்கள் அத்தனை பேரும் தங்களுடைய மொத்த சேமிப்பிலிருந்து கடைசி காலத்தில் 1% ராணுவத்திற்காக வழங்க வேண்டும் என்பதை சட்டமாக இயற்ற வேண்டும். ராணுவ வீரர்கள் நமக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டு நம்மை காப்பாற்றி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Everyone should salute him .He is a real hero unlike reel ones.
All these Flag Day etc Donations MUST ONLY be Given to Poor Ex/Servicemen Without Pensions& UnCared by PublicityGovts And Not for Any Other Purpose
உத்தமமான மனிதர். தேசபக்திக்கு முழு இலக்கணம். இறையருள் என்றும் தங்களுடன் இருக்கும் ஐயனே
நல்ல காலம் அடுத்தவன் சொத்தை ஆட்டயப்போடும் திருட்டு கட்டப்பஞ்சாயத்து கும்பலுக்கு தெரிவதற்க்கு முன்பு நல்ல காரியத்தை செய்து முடித்துள்ளார். ஆறியிரமாயிரம் வணங்குதல்கள். வாழ்க இப்புண்ணிய ஆத்மா .
இந்துக்களுக்கு மட்டும் தான் இவ்வாறான தேசப்பற்று இருக்கும். ராணுவ தளபதி இறந்தமையையே கொண்டாடிய அந்நிய தேச மதப்பற்றாளர்கள் அதிகமிருக்கும் நாடு தானே நம் தமிழ்நாடு.
வாழ்த்துக்கள் அண்ணா. மனைவி இல்லை குழந்தைகள் இல்லை நான் இறந்த பிறகு என்னிடம் உள்ள இந்த பணம் ராணுவத்தினருக்கு சேரட்டும் என்ற நல்ல எண்ணம் பாராட்டுதலுக்கு உரியது
பல ஏழைகளுக்கு உதவிஇருக்கலாம் மந சாந்தி கிடைத்திருக்கும்
Great.
எத்தனையோ கயவர்கள் அடுத்தவன் கஷ்டபட்டு சம்பாதித்த சொத்து புடுங்கி வாழும் காலத்தில், இது போன்ற உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் இன்னும் இருப்பதால் தான் இந்த பூமி மழையிலாமலும் அனைவரையும் ரட்சிக்கிறது
ஏழைகளுக்கு படிப்பு, சாப்பிடு, மருந்து செலவு செய்தேரிக்கலாம்
பேணா சிலை வைப்பதைவிட இந்த மாதிரி நல்ல உள்ளங்களுக்கு வைக்கலாம். .மேலும்
-
எஸ்.பி.ஐ., நிதிநிலை முடிவுகள் வலுவாக இருந்தும் பங்குகள் சரிந்தது ஏன்? எஸ்.பி.ஐ., பங்குகளை வாங்கலாமா?
-
புள்ளிகள் உயர்வா; அல்லது திட்டமிட்ட சதியா; ஆகஸ்ட் 3 மற்றும் 4ல் நடந்தது என்ன? 'சி.ஏ.எஸ்' ஏல வர்த்தகத்தில் செபி ஆய்வு
-
அரசியலில் களமிறங்க நடிகர் தனுஷ் ஆர்வம்; உளவுத்துறை வாயிலாக கண்காணிக்கும் அரசு
-
லஞ்சம் வாங்கிய கணவர் நீக்கம்; மனைவிக்கு அதே பதவி தந்த த.வெ.க.,
-
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை குறித்த தனி தீர்மானம் நிறைவேறியது!
-
பேராசிரியர்கள் போராட்டம் இரவிலும் தொடர்கிறது