இயந்திர கோளாறால் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்; சென்னை விமான நிலையத்தில் திக்...திக்...!
- நமது சிறப்பு நிருபர் -
கொல்கத்தாவிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த இண்டிகோ விமானம் தரையிறங்கும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து வந்த இண்டிகோ விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்குச் சற்று முன் அதன் இடது பக்க இன்ஜின் பழுதடைந்தது. உஷாரான விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக விமான நிலையத்தில் முழுமையான அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. விமானம் உடனடியாக தரை இறங்கவும் அனுமதி வழங்கப்பட்டது. எந்தவிதமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், விமான நிலையத்தில் அனைத்து பிரிவு மீட்பு மற்றும் அவசர பணி ஊழியர்களும் தயார் நிலையில் இருந்தனர். இரவு 11.37 மணியளவில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
விமானத்துக்கோ, அதில் வந்த பயணிகளுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. உடனடியாக அதில் வந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அரை மணி நேரத்துக்கும் மேல் நீடித்த பதற்றமான சூழல், பின்னர் இயல்பாக மாறியது. உடனடியாக அவசரநிலை வாபஸ் பெறப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறப்பு வீடியோ!
சென்னை விமானம் எமர்ஜென்சி லேண்டிங்; ஏர்போர்ட்டில் 40 நிமிட பரபரப்பு குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
பயணிகள் விமானமென்றால் third grade importance தான்.. தமிழகயரசு பஸ்களை விட மோசமான பாராமரிப்பு..
இருக்கிறதே இரண்டு ஏர்லைன்ஸ் தான்
இண்டிகோ வுக்கும் ஏர் இந்தியா வுக்கும் தான் இயந்திர கோளாறே வருது .