மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தக் கூடாது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
சென்னை: பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தாமல் மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என முதல்வர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.
இதற்கு முன்னாடி எனக்கு கிடைத்த இடத்திற்கும், தற்போது எனக்கு கிடைத்து இருக்கும் இடத்திற்கும் மிகப்பெரிய காரணமாக இருக்கிறது பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள் தான் என்பதை மறுக்கவே முடியாது. அந்த நன்றி விசுவாசம், உணர்வுடன் இங்கே நின்று பேசுகிறேன். பெரிதாக பணம் இருந்துவிட்டால் ஒரு வீட்டிற்கே, பெரிய பொருளாதாரம் இருந்துவிட்டால் ஒரு நாட்டிற்கே, பெரிய பெயர் வந்துவிடும் என்று சில பேர் நினைக்கலாம்.
பெண் ஆளுமைகள்
உண்மையாக ஒரு வீட்டிற்கும், நாட்டிற்கும் எப்பொழுது பெரிய பெயர் கிடைக்கும் தெரியுமா; அந்த வீட்டு பெண்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தில் உயர்ந்தால் தான் பெரிய பெயர் ஒட்டுமொத்த சமூகத்திற்கே கிடைக்கும்.
@quote@நமது தமிழக மண்ணில் அன்றைக்கும், இன்றைக்கும் பெண் ஆளுமைகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.quote
சுந்திர போராட்டத்தில் இருந்து சமூக நீதி போராட்டம் வரைக்கும் கலந்து கொண்டவர்கள் தான் நமது தமிழக பெண்கள். கல்வி, நீதி, தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் இன்றைக்கு தமிழக பெண்களின் பங்களிப்பு பெரிதாக இருக்கிறது என்பதை யாரும் மறுக்கவே முடியாது.
சலுகை அல்ல
பெண்களுக்கு அரசியலிலும் முன்னேற வழிவகை செய்ய வேண்டும்; அது இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவது சலுகை என்று நினைத்துவிடக்கூடாது. சமூகநீதி, அரசியலமைப்பை சார்ந்தது. நமது மக்கள்தொகையில் பாதி பேர் பெண்கள் தான். அவர்களுக்கு சமஅந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.
அரசியலமைப்பு சட்டமும் அவர்களுக்கு சம உரிமையை வழங்கி தான் இருக்கிறது. தமிழகத்தை எடுத்துக் கொண்டாலும் ஓட்டு சதவீதத்தில் கூட பெண்கள் தான் அதிகம். 2021 சட்டசபையில் 12 பெண்கள் இருந்தார்கள். தற்போது 2026 சட்டசபையில் 23 பெண்கள் இருக்கிறார்கள். 2 மடங்கு ஆகி இருக்கிறது. சதவீத கணக்குப்படி பெரிதாக உயரவில்லை.
33 சதவீத இடஒதுக்கீடு
மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை உடன் இணைத்து ஒத்திவைக்க கூடாது. மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தக் கூடாது; தொகுதி ஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்துகிறது.தவெக அரசு பெண்களுக்கான அரசியல் அதிகாரம் வழங்குவதில் முன்னோடி மாநில அரசாக தான் இருக்கிறது. 4 பெண் அமைச்சர்கள் இருக்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பிற்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை இருக்கிறது.
தாமதப்படுத்த கூடாது
பெண்களுக்கான பாதுகாப்பில், பெண்களுக்கான முக்கியத்துவத்தில் தவெக அரசு மிகவும் கவனமாக இருக்கிறது. இனியும் அப்படித்தான் இருக்கும். ஒரு பெண் அதிகாரம் பெறும் போது அந்த குடும்பம் உயர்கிறது; ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாரத்தை பெறும் போது அந்த நாடே உயரும். பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தாமல் மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்
543 எம்பிக்கள்
லோக்சபாவில் மொத்த எம்பிக்கள் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும். தற்போதுள்ள லோக்சபா எம்பிக்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.
@quote@வரும் லோக்சபா பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டசபை பொதுத் தேர்தல்களிலும் 3ல் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த தீர்மானம் ஒரு அரசியல் கட்சியின் தீர்மானம் அல்ல.
quote
தமிழகத்தின் உரிமையை நிரந்தரமாக பாதுகாக்கும் தீர்மானம்; அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் இந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
யார் எதிர்ப்பு? யார் ஆதரவு?
தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு திமுக, விசிக, இந்திய முஸ்லிம் லீக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதேநேரத்தில் அதிமுக, பாஜ, பாமக எதிர்ப்பு தெரிவித்தன.
இது குறித்து சட்டசபையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசுகையில், '' நிர்வாக வசதிக்காக வாக்காளர் அதிகமுள்ள தொகுதிகளை மறு வரையறை செய்வதில் எந்த தவறும் இல்லை; அரசியல் காரணங்களுக்காக தவெக அரசு கொண்டு வரும் இந்த தீர்மானத்தை அதிமுக எதிர்க்கிறது.
வரும் லோக்சபா பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டசபை பொதுத்தேர்தலிலும் 3ல் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனை பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற அரசின் தனித் தீர்மானத்தில் வரிசை எண் 3ல் கொடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை மட்டும் அதிமுக ஆதரிக்கிறது,'' என்றார்.
@block_P@
தொகுதி மறுவரையறை குறித்து அரசின் மசோதா ஒருமனதாக சட்டசபையில் நிறைவேறியது. முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.
block_P
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சட்டசபையில் முதல்வர் விஜய் உரை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இதை எதிர்ப்பது இவர்கள் ஆட்சியில் ஒட்டுன்னியாக இருக்கும் காங்கிரஸ், அவர்களை கேட்காமல் எதற்குஎடுத்தாலும் திருட்டு திமுக மாதிரி, மத்திய அரசு என்று சொல்லிக்கொண்டு???
உறுதியாக சொல்றேன். தெரிந்தோ தெரியாமலோ முதல்வர் சீட் வரைக்கும் விதி கொண்டு வந்து சேர்த்துட்டுது. நாற்காலியில் பசை போட்டு ஒட்டிக்க தேவையானதை செய்தே ஆகணும். முதல்வர் ஒண்ணும் அதிசயம் பிறவி இல்லையே. சாதாரண மனுஷப்பிறவிதானே.பேய் அழகா இருந்தாலும் பேய் பேய்தான் என்பது வெளிச்சத்துக்கு வந்துடும்.
மத்திய அரசு என்பது எல்லா மாநிலங்கள் சேர்க்கை. மாநில அளவில் மகளிர் இட ஒதுக்கீடு 33 சதம் கல்வி, வேலை, அரசியல் கட்சி பதவிகள், அமைச்சர், சட்ட மன்ற உறுப்பினர்கள் பதவியை மசோதா மூலம் உறுதி செய்ய முடியும். மத்திய அரசு, ஐ. நா. சபை இதை செய், அதை செய் என்று தொங்கு மாநில நிர்வாகம் வற்புறுத்த கூடாது. மாநில எல்லைக்குள் மட்டும் செயல்பாடு இருக்க வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கையை 39 திராவிட அதிசய பிறவிகள் பார்த்து கொள்வார்கள். சிறு பான்மை மதத்தில் பல தார முறை, கன்னியாஸ்திரி முறையை தமிழகத்தில் மகளிருக்கு சம உரிமை கொடுத்து மாற்றி அமைக்கலாம். வெட்டி கழகம், மூச்சு விட, நெருங்க முடியுமா?
தொகுதி மறு வரையறை கூடாது என்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு MP கள் இருக்கிறார்கள் தொகுதி மறு வரையறையினால் எப்படி MP கள் எண்ணிக்கை அதிகமாகும் தென் மாநிலங்கள் எப்படி பாதிக்கப்படும் என்ற விவரங்களை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லலாம். தொகுதி மறு வரையறைக்கு பின்பு மகளீர் இட ஒதுக்கீடுகள் கொண்டு வந்தால் நிறைய மகளீருக்கு வாய்ப்பு கிடைக்குமே
இந்த நீலிகண்ணீர் வடிக்கிற வேலை வேண்டாம் முதல்ல சட்டமன்றத்தில் மதமாற்ற பிரச்சாரம் செய்வதை நிறுத்துங்க பிறகு நவோதயா பள்ளிக்கூடம் திறக்க ஏற்பாடு செய்யுங்க அதையெல்லாம் விட்டுட்டு இந்த மாதிரியான நாடகம் நடத்தவேண்டாம்
உண்மையில் இவர் ஒரு அரைவேக்காடு தான். எண்ணிக்கையை கூட்டாமல் எப்படி ஐயா பெண்களுக்கான இட ஒதுக்கீடை உண்டாக்க முடியும்.
... துணை முதல்வர் ஆக முன் ஏற்பாடு
பெரம்பூர், கோபி தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கினால் ஏற்பாரா??
அடுத்த இரண்டரை ஆண்டுக்கால முதல்வர் பதவியை ஒரு பெண்ணிடம் கொடுத்து சமத்துவத்தை நிலைநாட்ட விஜய் தயாரா? காவல்துறை, நிதித்துறை ,வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை போன்ற முக்கிய துறைகளை எப்போது பெண்களுக்குத் தருவீர்கள்?.
கோவை தனியார் கல்லூரி மாணவரை 20 பேர் கொண்ட கும்பலால் இரும்பு ராட், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிப் படுகொலை. போதைப்பொருள் கும்பல் குறித்து தகவல் கொடுத்ததால் தங்களது மகன் கொலை செய்யப்பட்டார் என பெற்றோர்கள் பகிரங்க குற்றச்சாட்டு....சட்டம் ஒழுங்கு இப்படி சீரழிந்து கிடக்குது .....இதை சரி செய்ய வக்கில்லாமல் லாட்டரி கட்சி ...