‘நீட்’ அல்லாத படிப்புகளுக்கு பாட விருப்பங்களை நாளைக்குள் புதுப்பிக்க சென்டாக் அறிவுறுத்தல்
புதுச்சேரி: நீட் அல்லாத பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பாடப்பிரிவு விருப்பங்களை நாளைக்குள் புதுப்பிக்க வேண்டும் என, சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நீட் அல்லாத தொழில்முறை படிப்புகளான கால்நடை அறிவியல் படிப்பில் புதுச்சேரி அரசு ஒதுக்கீடு, சுயநிதி மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இடங்கள் உள்ளன.
பி.எஸ்சி., வேளாண்மை மற்றும் தோட்டக்கலை, பார்ம்–டி, பி.பார்ம்., பி.பி.டி., பி.எஸ்சி., பாரா மெடிக்கல் படிப்புகள், பி.டெக்., பி.ஏ., எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்பு மற்றும் ராஷ்ட்ரிய ரக் ஷா பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும் சட்டப் படிப்புகள் உள்ளன.
இதுமட்டுமின்றி பி.வோக் உயிரியல் சார்ந்த பாரா மெடிக்கல் டிப்ளமோ படிப்புகள் மற்றும் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., உள்ளிட்ட கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகளுக்கு உள்ளன. அனைத்து படிப்புகளுக்கு விண்ணப்பம் பெற்ற நிலையில் இந்தாண்டு இப்படிப்புகளில் நிரப்பப்பட உள்ள இடங்கள் குறித்த விபரங்கள் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
முதற்கட்ட கவுன்சிலிங் நடத்த நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் தங்கள் பாடப்பிரிவு விருப்பங்களை மாற்ற அல்லது புதுப்பிக்க விரும்பினால், நாளை 12ம் தேதி காலை 11.00 மணிக்குள் இணையதளம் வழியாகப் புதுப்பித்துக் கொள்ளலாம். பாடப்பிரிவு விருப்பங்கள் ஏதும் குறிப்பிடப்படாத விண்ணப்பங்கள் இட ஒதுக்கீட்டிற்குப் பரிசீலிக்கப்பட மாட்டாது. கூடுதல் விவரங்களுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். சந்தேகங்களுக்குத் தங்கள் லாக்-இன் பக்கத்தில் உள்ள குறைதீர்வு பகுதி மூலம் தெரிவிக்கலாம். 0413-2655570 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
இன்ஸ்டா காதல் கொலையில் முடிந்தது; தாய், மகளை கொன்ற வாலிபர் கைது
-
கல்வி அமைச்சகத்தில் மற்றொரு மாற்றம்; 17 நாட்களுக்குள் புதிய உயர்கல்விச் செயலாளர் நியமனம்
-
சொல்கிறார்கள் –––––––––––– ‘பசுமை சூழ்ந்த தோட்டத்தில் ஆரோக்கியமாக வாழ்கிறோம்!’ ––––––––––––
-
போதைப்பொருள் இல்லாத தமிழகம்; இயக்கத்தை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்
-
இடம்மாறினாலும் சட்டை பாக்கெட்டில் இருப்பது யார் படம்; சட்டசபையில் காரசார விவாதம்
-
ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 அதிகரிப்பு