இன்ஸ்டா காதல் கொலையில் முடிந்தது; தாய், மகளை கொன்ற வாலிபர் கைது

1

பல்லடம்: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, பல்லடத்தில், காதலியுடன், அவரது தாயையும் வெட்டிக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பச்சாபாளையத்தை சேர்ந்த பழனிசாமி தனலட்சுமி தம்பதியரின் மகள் பூவரசி 21. திண்டுக்கல்லை சேர்ந்த மணிக்குமார் மகன் அக்சயன், 25. அக்சயனுக்கும் பூவரசிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஏற்பட்டு ஐந்து ஆண்டுகளாக காதலித்தனர். சமீபத்தில் இருவரும் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

பூவரசியின் தாய் தனலட்சுமி இதை ஏற்க மறுத்து தாலியை பறித்து தூக்கி எறிந்து விட்டார். இதற்கிடையே, பூவரசியை பார்ப்பதற்காக திண்டுக்கல்லில் இருந்து பல்லடம் வந்த அக்சயன், கடந்த நான்கு நாட்களாக லாட்ஜில் தங்கி இருந்துள்ளார்.
இன்று காலை, பழனிசாமி வழக்கம் போல் வேலைக்குச் சென்றதும், பூவரசியை பார்ப்பதற்காக அக்சயன் அவரது வீட்டுக்கு வந்தார்.

அப்போது, அக்அசயனுக்கும் தனலட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆவேசம் அடைந்த அக்சயன், பூவரசியையும் தனலட்சுமியையும் அங்கிருந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தடுக்க முயன்ற நிலையில், அதையும் மீறி இருவரையும் வெட்டி கொலை செய்தார்.

இதனையடுத்து, அக்சயனை அங்கேயே கட்டி வைத்த பொதுமக்கள் போலீஸிடம் ஒப்படைத்தனர். மாவட்ட எஸ்.பி., தலைமையில் போலீசார் இது குறித்து கூடுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

திருப்பூரில் வீடு புகுந்து தாய், மகளை தீர்த்து கட்டிய கொடூரன்; கொலை பின்னணி குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement