இடம்மாறினாலும் சட்டை பாக்கெட்டில் இருப்பது யார் படம்; சட்டசபையில் காரசார விவாதம்
நமது நிருபர்
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசியதாவது: புதிய அரசின் திட்டங்களை தமிழக பட்ஜெட்டில் தேடுகிறேன். தேடுகிறேன். தேடிக் கொண்டே இருக்கிறேன். ஆனால் ஆளும் அரசு தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதியை பட்ஜெட்டில் நிறைவேற்றவில்லை;
அள்ளித்தெளித்த வாக்குறுதிகளை மறந்து முதல் பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்துள்ளது. பெயர் மாற்ற பட்டியல் போல் தமிழக பட்ஜெட் வெளியாகி உள்ளது. திருப்புகின்ற பக்கமெல்லாம் திமுக ஆட்சியின் திட்டங்களே பட்ஜெட்டில் உள்ளன. இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்.
துதிபாட அவசியமில்லை
இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்து பேசியதாவது: தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் 5 ஆண்டுகால இறுதிக்குள் நிறைவேற்றப்படும்; 3 மாதங்களில் சரித்திரம் படைக்க இயலாது; நீங்கள் அப்படி சரித்திரம் படைத்தால் சொல்லுங்கள்.
தமிழகமே பாரட்டி கொண்டு இருக்கும் தூய ஆட்சியை பற்றி, ஏமாற்றத்தை உருவாக்கும் ஆட்சி என்று நீங்கள் குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் இடம் மாறி இருக்கிறீர்கள், பரவாயில்லை. அதற்காக இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
ஓபிஎஸ் பதில்
இதற்கு ஓபிஎஸ் கூறியதாவது: முதலில் அந்த இடத்தை அவர் தான் மாற்றியவர் என்பதை இங்கே நான் தெரிவித்து கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன் என சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.
அமைச்சர்கள் சப்போர்ட்
உடனடியாக செங்கோட்டையனுக்கு ஆதவராக அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் ஆதரவாக பேசினர்.
ராஜ்மோகன்: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசும் போது இடத்தை முதலில் மாற்றியவர் நம்முடைய அமைச்சர் என்றார். ஆனால் பாருங்கள் என்ன ஆச்சரியம் என்றால், இடத்தை மாற்றிய போதும் அவர் இதயத்தின் அருகே இருந்த நிழல் படத்தை மாற்றவே வேண்டாம் என்று சொன்னவர் செங்கோட்டையன், ஆனால் அண்ணன் பாக்கெட் பார்க்கும் போது இடமும் மாறி இருக்கிறது, இதயமும் மாறி இருக்கிறதோ என்று தோன்றுகிறது, என்றார்.
ஆதவ்: எங்கள் அண்ணன் செங்கோட்டையன் இடம் மாறி இருக்கலாம்; ஆனால் ஜெயலலிதாவை தன்னுடைய இதயத்தில், சட்டை பையில் இன்னும் வைத்து இருக்கிறார். ஜெயலலிதாவால் முதல்வர் ஆக்கப்பட்டவர் இன்றைக்கு அவருடைய சட்டை பையில் யாருடைய புகைப்படம் இருக்கிறது, தமிழக மக்களுக்கு தெரியும், என்றார்.
இதற்கு ஓபிஎஸ் பதில் கூறுகையில், அண்ணாதுரை, ஜெயலலிதா, கருணாநிதி என அனைவரையும் எங்களுடைய இதயத்தில் கடைசி காலம் வரை வைத்து இருப்போம். படத்தை காட்டி ஏமாற்றும் பழக்கம் எங்களுக்கு இல்லை, என்றார்.
இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடந்தது.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சட்டசபையில் காரசார விவாதம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
பிரத்யேக வீடியோ!
சட்டசபையில் ஓபிஎஸ் Vs அமைச்சர்கள் காரசார விவாதம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
எல்லோர் படத்தையும் எங்கே வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் போகும் ஊரில் யாருக்கு மதிப்போ அங்கே அதை தெரியம்படியாக வைத்துக் கொள்ளலாம் மக்கள் முட்டாள்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று வெளிப்படையாகச் சொல்கிறார்கள் இதைக் கேட்டு மக்களும் சிரிக்கிறார்கள் யாருக்கும் வெட்கமில்லை
சட்டை பாக்கெட்டில் உள்ளது மடியில் கட்டிய கனத்தினை பொறுத்து.
சட்டசபை நடப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு அரசு, மக்கள் வரிப்பணத்தை எவ்வளவு செலவு செய்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா ? எதோ பார்க் பென்சில் உட்கார்ந்து அரட்டை அடிப்பதுபோல் இவர்கள் பேசிக்கொண்டு நேரத்தை விரயமடிக்கிறார்களே அவர்களுக்கு சொல்வதற்கு யாரும் இல்லையா ?,
மக்கள் நன்கு படித்து மக்களுக்கு தொண்டுசெய்ய ஆர்வமுள்ள இளைஞ்சர்களை சட்டசபைக்குள் அனுப்பவேண்டும் .கட்சி சின்னத்தை பார்த்த்து வாக்களிக்கக்கூடாது .அப்போதுதான் ஆட்சி முன்னேற்றங்களை கொண்டுவரமுடியும் .
ஆஹா என்ன ஒரு ஆக்கப்பூர்வமான, சிந்தனையை தூண்ணடும் மக்கள் நலம் நலம் சார்ந்த வாக்குவாதம். இதற்குள் விவாதம் என்று செய்தி தவெளியிடும் ஊடகங்களை சபாஷ் என்று சொல்லவேண்டும் .
இதெல்லாம் தேவையற்ற பேச்சு
இதில் எங்கய்யா மக்கள் பிரச்சனை வந்தது,
ஆக மொத்தம் மக்ள் வரிப்பபணத்தில் நடக்கும் சட்டசபையில் வேண்டாத விவாதங்களே ஜாஸ்தி. அவனவன் பிழைப்பைத்தேடி கட்சி மாறி காலத்திற்கு ஏற்றால் போல் சட்டை பையில் படத்தை வைத்து நடிக்கிறான்.
அரசும் சரி. சட்டசபை அலுவல்களும் சரி. செக்கு மாடுகள் போல சுற்றி சுற்றி வருகின்றன .
ரூபாய் நோட்டில் காந்தி படம் ..அதை பொதுவாகவே வைத்திருக்கும் இடம் ?மேலும்
-
ஏராளமான அச்சுறுத்தல்; ரகசிய பயணத்தை ஒப்புக்கொண்டார் அதிபர் டிரம்ப்
-
ஆடி அமாவாசை வழிபாடு; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
-
கைம்பெண்கள், ஆதரவற்றோர் இணையத்தில் பதிவு செய்யலாம்
-
மூதாட்டியிடம் இருந்து 3 பவுன் செயின் பறிப்பு
-
'எக்ஸ் 1 லாங் வீல் பேஸ்' முன்பதிவு துவக்கம்
-
மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்