என்.எல்.சி., பாதுகாப்பு படை ஊழியருக்கு கத்தி குத்து
நெய்வேலி. ஆக.11–: என்.எல்.சி., பாதுகாப்பு படை ஊழியர் பரணிதரன் என்பவர் நேற்று நெய்வேலி புதிய அனல் மின் நிலையம் அருகே உள்ள கைகேலார்குப்பம் செக் போஸ்டில் பணியில் இருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் வீடு கட்டும் சென்ட்ரிங் பொருட்களை டாட்டா ஏஸ் வாகனத்தில் எடுத்து சென்றார். பாதுகாப்பு பணியில் இருந்த பரணிதரன், வாகனத்தை நிறுத்தி பாஸ் உள்ளதா என்று கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பரணிதரனை செந்தில் தாக்கியுள்ளார். இதுகுறித்து, செக்யூரிட்டி தலைமை அலுவலகத்திற்கு பரணிதரன் தகவல் தெரிவித்தார்.
அதையடுத்து, நேற்று இரவு செக்யூரிட்டி ஊழியர் சக்திவேல் பணியில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் சக்திவேலை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து டவுன்ஷிப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘தொழிலில் சந்தைக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும்!’ ––––––––––––––
-
இயந்திர கோளாறால் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்; சென்னை விமான நிலையத்தில் திக்...திக்...!
-
மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தக் கூடாது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
-
இன்று இரவு முழு சூரிய கிரகணம்!
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு; தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ ரெய்டு!
-
ஏராளமான அச்சுறுத்தல்; ரகசிய பயணத்தை ஒப்புக்கொண்டார் அதிபர் டிரம்ப்
Advertisement
Advertisement