சென்டர் மீடியனை கடக்கும் வாகனங்கள்
திருப்புவனம்: மதுரை -- பரமக்குடி நான்கு வழிச்சாலையில் கனரக வாகனங்கள், பொதுமக்கள் என பலரும் விதிகளை மீறி சென்டர் மீடியனை கடப்பதால் விபத்து நேரிட்டு வருவதை தொடர்ந்து தடுப்புக்கள் அமைக்கப்பட்டு வரு கின்றன.
மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக ராமேஸ்வரம், ஏர்வாடி, கமுதி, இளையான்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு நான்கு வழிச்சாலை வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. நான்கு வழிச்சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு இடவசதி உள்ள இடங்களில் அரளிசெடிகள் வளர்க்கப்படுகின்றன.
நான்கு வழிச்சாலையின் குறிப்பிட்ட தூரங்களுக்கு இடையே வாகனங்கள், பாதசாரிகள் கடக்க சந்திப்பு அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கனரக வாகனங்கள், டூவீலர்கள், பொதுமக்கள் என பலரும் விதிகளை மீறி சென்டர் மீடியனை கடப்பதால் விபத்து ஏற்படுகிறது.
திடீரென நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் இருந்து வெளிப்படும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களால் முறையாக வாகனங்களை இயக்கிச் செல்பவர்கள் அதிர்ச்சியடைந்து தடுமாறுகின்றனர். சென்டர் மீடியனில் உயரம் வெகுவாக குறைந்திருப்பதால் லாரிகள், டிராக்டர்கள், கலவை இயந்திரங்கள் என பலவும் சென்டர் மீடியனை கடந்து எதிர் திசைக்கு வருகின்றன.
நான்கு வழிச்சாலையில் அதிவேகத்தில் வந்து கொண்டிருக்கும் வாகன ஓட்டுனர்கள் திடீரென குறுக்கே வரும் வாகனங்களால் விபத்துகளில் சிக்குகின்றனர்.
மணலூர், தட்டான் குளம், மழவராயனேந்தல் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் நிரந்தரமாகவே விதிகளை மீறி கடக்க பாதை அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்திகள் வெளியானதை தொடர்ந்து விதிகளை மீ றி சென்டர் மீடியனை கடக்கும் இடங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இரும்பு தடுப்பு அமைத்து வருகின்றன. இதனையும் மீறி கடப்பவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். மேலும் இதுபோன்ற இடங்களில் உயர் மின் கோபுர விளக்குகளும் பொருத்தப்பட உள்ளன.
மேலும்
-
இன்று இரவு முழு சூரிய கிரகணம்!
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு; தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ ரெய்டு!
-
ஏராளமான அச்சுறுத்தல்; ரகசிய பயணத்தை ஒப்புக்கொண்டார் அதிபர் டிரம்ப்
-
ஆடி அமாவாசை வழிபாடு; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
-
கைம்பெண்கள், ஆதரவற்றோர் இணையத்தில் பதிவு செய்யலாம்
-
மூதாட்டியிடம் இருந்து 3 பவுன் செயின் பறிப்பு