ஆடி அமாவாசை வழிபாடு; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்

5

-நமது நிருபர்-



ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, புஷ்ய மண்டப படித்துறை, திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்று படித்துறை உள்ளிட்ட இடங்களிலும் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.

ஆடி மாதங்களில் வரும் அமாவாசைகள், முன்னோரை நினைவு கூர முக்கியமான நாட்கள். முன்னோர் வழிபாட்டை, ஆடி அமாவாசையன்று, காலையே துவங்கி விட வேண்டும். ஏதாவது ஒரு தீர்த்தங்கரைக்குச் சென்று, தர்ப்பணம் செய்து வர வேண்டும். மதியம் சமையல் முடிந்ததும், மறைந்த முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு, திருவிளக்கேற்ற வேண்டும்.

ஒரு இலையில், அவர்கள் வாழ்ந்த காலத்தில் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளைப் படைக்க வேண்டும். படங்களுக்கு தீபாராதனை செய்த பிறகு, காகத்திற்கு உணவிட வேண்டும். இலையில் படைத்த படையலை வீட்டில் மூத்தவர் சாப்பிட வேண்டும்; அவர் சாப்பிட்டதும் மற்றவர்கள் சாப்பிடலாம். இவ்வாறு செய்வதால், முன்னோர் மகிழ்ந்து, நம்மை ஆசிர்வாதம் செய்வதாக ஐதிகம்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 12) ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்தனர். திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபட்டனர்.

அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, புஷ்ய மண்டப படித்துறை, திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்று படித்துறை, திருச்செந்தூர் கோவில் கடற்கரை, ஈரோடு மாவட்டம், பவானி அருகே கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம், கன்னியாகுமரி, கோவை நொய்யல் படித்துறை உள்ளிட்ட இடங்களிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.



@block_P@

மயிலாடுதுறையில் வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கடற்கரையில் திரண்ட மக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு பச்சரிசி, கீரை வகைகள், காய்கறிகள், எள் உள்ளிட்ட பொருட்களை வைத்து தர்ப்பணம் செய்தும் தானம் கொடுத்தும் வழிபட்டனர். மயிலாடுதுறை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் ,வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து சங்கம தீர்த்தத்தில் புனித நீராடி தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். block_P

@block_Y@

மக்கள் இதை தவிருங்கள்!


அமாவாசை தினத்தில் மக்கள் அனைவரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை வீட்டிலோ, ஆற்றங்கரையிலோ அல்லது கடற்கரையிலோ செய்ய வேண்டும். ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் இல்லாத சாலையோர கோவில்களின் முன்பாக, பலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை செய்கிறார்கள்.

அவர்கள் முன்னோர்களுக்காகப் படைக்கப்பட்ட உணவை, அங்கேயே விட்டுவிட்டு செல்வதால், அதன் மீது பைக் உள்ளிட்ட வாகனங்கள் ஏறிச் செல்கின்றன. இதனால் இந்த செயல்களை மக்கள் தவிர்க்க வேண்டும்.block_Y


தினமலர் ரீல்ஸ் வீடியோ!

ஆடி அமாவாசை குறித்து 2 ரீல்ஸ் வீடியோவில் தெளிவாகவும், சுருக்கமாகவும், துல்லியமாக தினமலர் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

இன்று ஆடி அமாவாசை விரதம்; (ஆடி 27, ஆகஸ்ட் 12)

ஆடி அமாவாசையில் அக்னி தீர்த்தம் முக்கிய இடம் பெறுவது ஏன்?

Advertisement