கைம்பெண்கள், ஆதரவற்றோர் இணையத்தில் பதிவு செய்யலாம்

கரூர்:கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர், நல வாரிய இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
கைம்பெண்கள், கணவரால், கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோருக்கு நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, https://www. tnwidow welfare board.tn.gov.in/ இணையதள பக்கத்தில், அரசின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதில், விபரங்களை இணையதள முகவரியில் பதிவு செய்து உறுப்பினராகலாம். மேலும் உறுப்பினராக பதிவு செய்யப்பட்டவர்களுக்கு, சமூக நல துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஓய்வூதியம், தற்காலிக தங்குமிடம், திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் சுய தொழில் செய்ய மானியம், 50 ஆயிரம் ரூபாய் உள்பட பிற உதவிகளை எளிதாக பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

Advertisement