வட்டார அளவில் கலைத்திருவிழா
திருவாடானை: திருவாடானை ஒன்றிய அளவிலான 2026-27 ம் ஆண்டிற்கான வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டிகளில் திருவாடானை ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் நாட்டியம், நடிப்பு, இசை போன்ற 32 வகையான போட்டிகள் நடந்தது. திருவாடானை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலா, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமல்ராஜ், பாண்டுகுடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் காரத்திக் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.
--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டாடா சன்ஸ் குழும தலைவர் சந்திரசேகரன் திடீர் ராஜினாமா; சேர்மனுடன் கருத்து வேறுபாட்டால் முடிவு
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘தொழிலில் சந்தைக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும்!’ ––––––––––––––
-
இயந்திர கோளாறால் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்; சென்னை விமான நிலையத்தில் திக்...திக்...!
-
மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தக் கூடாது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
-
இன்று இரவு முழு சூரிய கிரகணம்!
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு; தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ ரெய்டு!
Advertisement
Advertisement