குடிக்க பணம் கேட்டு நண்பர் மீது தாக்குதல்
விழுப்புரம்: வளவனுார் அருகே குடிப்பதற்கு பணம் கேட்டு நண்பரை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த வி.அரியலுாரை சேர்ந்தவர் வாசுதேவன் மகன் ரஞ்சித்குமார், 32; இவர், தனது நண்பரான சசிக்குமாருடன், 25; நேற்று முன்தினம் இரவு, பைக்கில் புதுச்சேரி மாநிலம் மடுகரைக்குச் சென்று, மது அருந்திவிட்டு, பைக்கில் திரும்பி வந்தார்.
அப்போது, வளவனுார் அடுத்த சிறுவந்தாடு பகுதியில் வந்தபோது, ரஞ்சித்குமாரின் நண்பரான விழுப்புரம் அடுத்த சாலாமேடை சேர்ந்த பழனி மகன் கருணா, 32; என்பவர், மது போதையில் வழிமறித்து, குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தார்.
பணம் தராததால், ஆத்திரமடை ந்த கருணா, ரஞ்சித்குமாரை திட்டி, தாக்கினார். காயமடைந்த அவர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வளவனுார் போலீசார், கருணா மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
டாடா சன்ஸ் குழும தலைவர் சந்திரசேகரன் திடீர் ராஜினாமா; சேர்மனுடன் கருத்து வேறுபாட்டால் முடிவு
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘தொழிலில் சந்தைக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும்!’ ––––––––––––––
-
இயந்திர கோளாறால் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்; சென்னை விமான நிலையத்தில் திக்...திக்...!
-
மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தக் கூடாது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
-
இன்று இரவு முழு சூரிய கிரகணம்!
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு; தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ ரெய்டு!