'மொட்டை கடுதாசி' யால் கூட்டுறவு வங்கியில் பரபரப்பு
கடலுார் மத்திய கூட்டுறவு வங்கி 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதில் பணியாற்றும் வங்கி அதிகாரி ஒருவரை பற்றி அ.தி.மு.க., தொழிற்சங்க லெட்டர் பேடை ஸ்கேன் செய்து அதில் அந்த அதிகாரியை பற்றி அடுக்கடுக்காய் புகார்களை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், அந்த அதிகாரி ஊழியர்களை மதிப்பதில்லை, அலட்சியமாக பேசுவது, வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வர ஊழியர்களை நிர்பந்திப்பது, ஊழியர்களின் டிரான்ஸ்பர் கோப்புகளை தமது வசம் வைத்துக் கொள்வது, வங்கியின் முக்கிய விவரங்களை மாஜி அதிகாரியிடம் தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளை 'பாரா பாரா'வாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம் எழுதப்பட்டுள்ள லெட்டர் பேடு அ.தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகிக்கு சொந்தமானதாக இருந்ததால், அவர் கடிதத்திற்கும், தமக்கும் தொடர்பில்லை என போலீஸ் எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த மொட்ட கடித விவகாரம் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மத்தியில் டெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்
-
டாடா சன்ஸ் குழும தலைவர் சந்திரசேகரன் திடீர் ராஜினாமா; சேர்மனுடன் கருத்து வேறுபாட்டால் முடிவு
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘தொழிலில் சந்தைக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும்!’ ––––––––––––––
-
இயந்திர கோளாறால் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்; சென்னை விமான நிலையத்தில் திக்...திக்...!
-
மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தக் கூடாது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
-
இன்று இரவு முழு சூரிய கிரகணம்!
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு; தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ ரெய்டு!