புதுச்சேரி பல்கலையில் ஆராய்ச்சி சங்கமம்
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி சங்கமம் - 2026 நிகழ்ச்சி நடந்தது.
பல்கலைக் கழக துணை வேந்தர் பிரகாஷ் பாபு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பல்கலைக் கழகத்தின் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறந்த ஆராய்ச்சிகள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளை ஒரே தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
இதில் கலை, அறிவியல், மனிதநேயம், பொறியியல் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு புலங்களை சேர்ந்த துறைகளின் முனைவர் பட்ட ஆய்வாளர்கள், தங்களது ஆராய்ச்சி முடிவுகள், புதுமையான சிந்தனைகள் மற்றும் ஆய்வுத் திட்டங்களை காட்சிப்படுத்தினர். ஆராய்ச்சி காட்சிகளை பல்கலைக் கழகத்தின் இயக்குநர்கள், பதிவாளர், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் இளநிலை, முதுநிலை மாணவர்கள் என, பார்வையிட்டனர்.
ஆராய்ச்சி படைப்புகளை பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவினர் மதிப்பீடு செய்தனர். அறிவியல் தரம், புதுமை, ஆராய்ச்சியின் பொருத்தம் மற்றும் சமூகத் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் ஆய்வுகள் மதிப்பிடப்பட்டு, சிறந்த ஆராய்ச்சிப் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆராய்ச்சிகளுக்கான விருதுகள் சுதந்திர தின விழா அன்று வழங்கப்பட உள்ளது.
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘தொழிலில் சந்தைக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும்!’ ––––––––––––––
-
இயந்திர கோளாறால் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்; சென்னை விமான நிலையத்தில் திக்...திக்...!
-
மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தக் கூடாது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
-
இன்று இரவு முழு சூரிய கிரகணம்!
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு; தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ ரெய்டு!
-
ஏராளமான அச்சுறுத்தல்; ரகசிய பயணத்தை ஒப்புக்கொண்டார் அதிபர் டிரம்ப்