வீனஸ் பள்ளியில் தாய்ப்பால் வார விழா  

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் பள்ளியில், தாய்ப்பால் வார நிறைவு விழா நடந்தது.

இந்திய குழந்தை மருத்துவக் கழகம், ரோட்டரி கிளப் ஆப் சிதம்பரம் மற்றும் இன்னர் வீல் கிளப் சார்பில், உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, சிதம்பரத்தில் பல்வேறு பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தப்பட்டது.

இதன் நிறைவு விழா வீனஸ் பள்ளியில், கொண்டாடப்பட்டது. பள்ளி நிறுவனர் குமார் தலைமை தாங்கினார். தாளாளர் ரூபியாள் ராணி, பள்ளி தலைவர் லியோனா முன்னிலை வகித்தனர்.

விழாவில், குழந்தைகள் நல டாக்டர்கள் பத்மினி, சிவபிரகாசம் பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு . ஆர்.டி.ஓ., தனலட்சுமி பரிசுகள் வழங்கி பேசினார். தொடர்ந்து வீனஸ் குழும பள்ளிகளின் நிர்வாக இயக்குநர் அருண், 'தாய்ப்பால் ஊட்டுதல் மற்றும் குழந்தை ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் இன்னர்வீல் நிர்வாகிகள் வரலட்சுமி, கனகவேல், அனிதா, சம்பத் பேகம், ஷீலாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement