போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனை
புதுச்சேரி: வாகன சோதனையில் விதி மீறிய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபாரதம் விதித்தனர்.
போக்குவரத்து சீனியர் எஸ்.பி., திவ்யா உத்தரவின் பேரில், போக்குவரத்து வடக்கு இன்ஸ்பெக்டர் வேலய்யன் தலைமையில் போலீசார் வில்லியனுார் மெயின் ரோடு, மூலக்குளம் பகுதியிலுள்ள தக்க குட்டை அருகே மாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்லும் நேரத்தில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் வந்த பஸ்கள், லாரிகள், வேன்கள் மற்றும் கார்களை போலீசார் மடக்கி, அபராதம் விதித்தனர்.
மேலும், பள்ளி வேலை நேரங்களில் வேகத்தை குறைத்து, விதிமுறைகளை சரியாக பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என, ஓட்டுநர்களுக்கு போலீசார் அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆடி அமாவாசை வழிபாடு; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
-
கைம்பெண்கள், ஆதரவற்றோர் இணையத்தில் பதிவு செய்யலாம்
-
மூதாட்டியிடம் இருந்து 3 பவுன் செயின் பறிப்பு
-
'எக்ஸ் 1 லாங் வீல் பேஸ்' முன்பதிவு துவக்கம்
-
மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
-
மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் தொழிலாளர்கள்
Advertisement
Advertisement