சிதம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து5 பவுன் பவுன் நகை மற்றும் பணம் திருட்டு

சிதம்பரம்:சிதம்பரத்தில் பூட்டிய வீட்டு கதவை உடைத்து 5 பவுன் தங்க நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்

சிதம்பரம் வண்டிகேட் அப்துல் ரகுமான் ராமன் நகரை சேர்ந்தவர் வைத்தியநாதன் மகன் கணேசன் (75), இவர் கடந்த 9ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, கோயம்புத்தூரில் உள்ள தன் மகன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி காலையில் கோயம்புத்தூரில் இருந்து சிதம்பரத்துக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சடைந்தார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்குள் சென்று * பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் பணம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து நகர காவல் நிலையத்தில் கணேசன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement