இடிந்து விழும் நிலையில் நீர்தேக்க தொட்டி
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தேத்தாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கலியங்குப்பம் பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் உள்ளது. இதில், கலியங்குப்பத்தில் உள்ள நீர்தேக்க தொட்டி 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்த நீர்தேக்க தொட்டியை தாங்கி நிற்கும் கான்கிரீட் துாண்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, கம்பிகள் துருபிடித்து வலுவிழந்த நிலையில் உள்ளது. தொட்டியின் மேல் மரக்கன்றுகள் முளைத்து சுற்றிலும் தண்ணீர் கசிந்து வருகிறது. அதேபோன்று, தேத்தாம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே உள்ள மற்றொரு நீர் தேக்க தொட்டியில் நீர்கசிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நீர்தேக்க தொட்டி தாங்கி நிற்கும் துாண்களும் சேதமடைந்துள்ளது. எனவே, இடிந்து விழும் நிலையில் உள்ள இரண்டு நீர் தேக்க தொட்டிகளையும் அகற்றிவிட்டு புதியதாக கட்ட வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
ஆடி அமாவாசை வழிபாடு; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
-
கைம்பெண்கள், ஆதரவற்றோர் இணையத்தில் பதிவு செய்யலாம்
-
மூதாட்டியிடம் இருந்து 3 பவுன் செயின் பறிப்பு
-
'எக்ஸ் 1 லாங் வீல் பேஸ்' முன்பதிவு துவக்கம்
-
மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
-
மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் தொழிலாளர்கள்