கணக்கெடுப்புப்பணி ஆசிரியையை தாக்கிய போதை நபர் கைது
திண்டுக்கல், ஆக. 12 –
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை நாடுகண்டனுார் ஆரம்பப்பள்ளி ஆசிரியை ஜெயலட்சுமி 40. இவர் அலைபேசியில் செயலி பதிவேற்றம் செய்ய முடியாததால் சமீபத்தில் ரூ.35 ஆயிரத்திற்கு புதிய அலைபேசி வாங்கியிருந்தார். நேற்று மாலை 4:30 மணிக்கு பாடியூர் அருகே உள்ள லட்சுமணபட்டி பாலமுருகனின் 37, வீட்டிற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு சென்றார். நீங்கள் யார், என மது போதையில் இருந்த பாலமுருகன் 37, கேட்டுள்ளார். ஆசிரியை மக்கள் தொகை கணக்கெடுக்க வந்துள்ளேன் எனக்கூறி அடையாள அட்டை, அலைபேசி செயலியை காண்பித்து கேள்விகளை கேட்டார். இதனால் பாலமுருகன் கோபமடைந்து, ஆசிரியையிடம் இருந்து அலைபேசியை பிடுங்கி, கைகளால் முகத்தில் குத்தினார். பின் கைகளை முறுக்கி முதுகில் தாக்கினார். இதில் ஆசிரியைக்கு முகத்தில் ரத்தக்காயமும், பின்புற முதுகு, தலையில் ஊமைக்காயங்கள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட ஆசிரியை ஆட்டோவில் திண்டுக்கல் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றார். திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் உலகநாதன் அலைபேசியை கைப்பற்றி பாலமுருகனை கைது செய்து விசாரிக்கிறார்.
மேலும்
-
ஏராளமான அச்சுறுத்தல்; ரகசிய பயணத்தை ஒப்புக்கொண்டார் அதிபர் டிரம்ப்
-
ஆடி அமாவாசை வழிபாடு; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
-
கைம்பெண்கள், ஆதரவற்றோர் இணையத்தில் பதிவு செய்யலாம்
-
மூதாட்டியிடம் இருந்து 3 பவுன் செயின் பறிப்பு
-
'எக்ஸ் 1 லாங் வீல் பேஸ்' முன்பதிவு துவக்கம்
-
மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்