டீக்கடையில் சிலிண்டர் வெடித்து மாணவி உட்பட 13 பேர் காயம்

1

பெரம்பலுார்: டீக்கடையில் சிலிண்டர் வெடித்து, மாணவி மித்ரா, 14, உட்பட 13 பேர் காயமடைந்தனர்.

பெரம்பலுார் மாவட்டம், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் அருணாசலம், 40. இவர், பெரம்பலுார் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் டீக்கடை வைத்துள்ளார்.

நேற்று மாலை 4:30 மணியளவில், இவரது டீ கடையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரில், காஸ் வெளியாகி தீப்பிடித்து வெடித்தது.

இதில், அவ்வழியே நடந்து சென்ற, 9ம் வகுப்பு மாணவி மித்ரா, 14, படுகாயமடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார்.

மேலும், விஜயகுமார், 47, அமீர்கான், 51, புவனேஸ்வரி, 32, உட்பட 13 பேர் காயமடைந்தனர். அவர்கள், பெரம்பலுார் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 17 டூ - வீலர்கள் எரிந்து நாசமாகின. போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

Advertisement