பொருளாதார வளர்ச்சி ஆந்திராவில் 11 சதவிகிதம் ஆனது
அமராவதி: ஆந்திராவின் பொருளாதாரம் 2025 - 26ம் நிதியா ண்டின் இரண்டாவது காலாண்டில் 10.70 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
மாநில திட்டமிடல் துறை அதிகாரிகள், 2026 ஜூலை மாதத்துக்கான பொருளாதார அறிக்கையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் சமர்ப்பித்தனர். அதில், வேளாண் துறை 13.50 சதவீதம், தொழில் துறை 10.60 சதவீதம், சேவைத் துறை 9.90 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2023 - 24-ல் 6.50 சதவீதமாக இருந்த நிலையில், 2025 - 26-ல் 9.90 சதவீதமாக உயர்ந்துள்ளது; கடந்த 2 ஆண்டுகளாக தேசிய பொருளாதார வளர்ச்சியை விட ஆந்திராவின் வளர்ச்சி அதிகமாக இருந்தது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல் நினோ தாக்கம் தொடர்ந்தாலும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை 15 சதவீதமாக உயர்த்துவதற்கான விரிவான திட்டங்களை தயாரிக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘தொழிலில் சந்தைக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும்!’ ––––––––––––––
-
இயந்திர கோளாறால் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்; சென்னை விமான நிலையத்தில் திக்...திக்...!
-
மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தக் கூடாது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
-
இன்று இரவு முழு சூரிய கிரகணம்!
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு; தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ ரெய்டு!
-
ஏராளமான அச்சுறுத்தல்; ரகசிய பயணத்தை ஒப்புக்கொண்டார் அதிபர் டிரம்ப்