உணவு பதப்படுத்துதல் துறை வழிகாட்டுதல் நிகழ்ச்சி
சென்னை:உணவு பதப்படுத்துதல் துறையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யவும், தொழில்முனைவோர் தங்களின் தொழிலை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கவும், உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப வழிகாட்டுதல் நிகழ்ச்சியை, சென்னை கிண்டியில் நாளை, தமிழக அரசின் டி.என்.எபெக்ஸ் நிறுவனம் நடத்த உள்ளது.
மத்திய அரசின் சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம், தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இதில் பங்கேற்று, உணவு பதப்படுத்துதல், மதிப்பு கூட்டல் குறித்து விளக்கமளிக்க உள்ளனர்.
அதன்படி, சிறுதானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள் தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள், தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதலை தெரிவிக்க உள்ளனர்.
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘தொழிலில் சந்தைக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும்!’ ––––––––––––––
-
இயந்திர கோளாறால் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்; சென்னை விமான நிலையத்தில் திக்...திக்...!
-
மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தக் கூடாது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
-
இன்று இரவு முழு சூரிய கிரகணம்!
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு; தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ ரெய்டு!
-
ஏராளமான அச்சுறுத்தல்; ரகசிய பயணத்தை ஒப்புக்கொண்டார் அதிபர் டிரம்ப்