தமிழகத்தில் ரூ.420 கோடி முதலீடு மூன்று நிறுவனங்களுக்கு ஒப்புதல் 

சென்னை: சென்னை தாம்பரத்தில் உள்ள, 'மெப்ஸ்' எனப்படும் மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தின் ஒப்புதல் குழு கூட்டம், மண்டல வளர்ச்சி ஆணையர் அலெக்ஸ் பால் மேனன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.

இக்கூட்டத்தில், தமிழகம், அந்தமான், புதுச்சேரியில், பல்வேறு துறைகளில், 443 கோடி ரூபாய் முதலீட்டில், 2,424 வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், 11 தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 'இசட்.எப். இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி' நிறுவனம், கோவையில், 336 கோடி ரூபாய் முதலீட்டில், 250 நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும் ஆலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள, 'சிப்காட்' நிறுவனத்தின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 'சான்மினா - எஸ்.சி.ஐ., இந்தியா' நிறுவனம், 72.7 கோடி ரூபாய் முதலீட்டில் ஆலை அமைக்க உள்ளது.

கோவை விளாங்குறிச்சியில் உ ள்ள, 'எல்காட்' நிறுவனத்தின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 'விசின்ட் சிஸ்டம்ஸ்' நிறுவனம், 11.31 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய் யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement