மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் தொழிலாளர்கள்
கிருஷ்ணராயபுரம்:பாலப்பட்டி சாலையில், மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம்
அடுத்த சிந்தலவாடி பஞ்சாயத்து பாலப்பட்டி, மத்திப்பட்டி ஆகிய
சாலை
யோர இடங்களில், பஞ்சாயத்து சார்பில் மரக்கன்றுகள்
நடப்பட்டுள்ளன. புளியன், வேம்பு, புங்கன், ஈட்டி ஆகிய மரக்கன்றுகள்
நடப்பட்டு, தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. செடிகள் வளர்ந்து வரும்
வகையில், பஞ்சாயத்தில் உள்ள 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு
தினமும் பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று பாலாப்பட்டி,
மத்திப்பட்டி பகுதிகளில் உள்ள மரக்கன்றுகளுக்கு, தொழிலாளர்கள்
தண்ணீர் ஊற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement