விளையாட்டு உபகரணங்கள்

திருப்பரங்குன்றம்: மதுரை அ.தி.மு.க., கிழக்கு புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா பிறந்தநாளை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. வேலுச்சாமி வாத்தியார் அறக்கட்டளை சார்பில் 25 கிரிக்கெட் அணிகளை சேர்ந்த குழுவினருக்கு உபகரணங்கள், வாலிபால், கூடைப்பந்து, சிலம்பாட்டம், கபடி வீரர்களுக்கு உபகரணங்களை ராஜன் செல்லப்பா வழங்கினார்.‌ பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.‌

Advertisement