மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர்:கரூர் மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் அமைப்பு சார்பில், தலைவர் கருணாநிதி (சி.ஐ.டி.யு.,) தலைமையில், மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், துாய்மை பணியாளர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஊதியம், 760 ரூபாய் வழங்க வேண்டும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்க வேண்டும், பி.எப்., இ.எஸ்.ஐ., அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement