ஆபரண தங்கத்தின் விலை இன்றும் அதிகரிப்பு; சவரனுக்கு ரூ.400 உயர்வு!

2


சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து 14 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 10) ஆபரண தங்கம் கிராம், 13,950 ரூபாய்க்கும், சவரன், 1,11,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


நேற்றைய நிலவரம்




நேற்று (ஆகஸ்ட் 11) காலை தங்கம் விலை கிராமுக்கு, 300 ரூபாய் உயர்ந்து, 14,250 ரூபாய்க்கு விற்பனையானது.சவரனுக்கு, 2,400 ரூபாய் அதிகரித்து, 1,14,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 10 ரூபாய் உயர்ந்து, 260 ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்று மாலை தங்கம் விலை கிராமுக்கு, 100 ரூபாய் குறைந்து, 14,150 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 800 ரூபாய் சரிவடைந்து, 1,13,200 ரூபாய்க்கு விற்பனையானது. இதையடுத்து, நேற்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு, 1,600 ரூபாய், வெள்ளி கிலோவுக்கு, 10,000 ரூபாய் அதிகரித்தன.


இன்றைய நிலவரம்




இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து 14 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 260 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.


கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Advertisement